📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 21, 2026 10:03 AM

வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைக்க வாய்ப்பு.. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் பெருமை

வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைக்க வாய்ப்பு.. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் பெருமை

வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைக்க வாய்ப்பு.. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் பெருமை

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டிற்குச் சென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 11 பேர் கொண்ட விளையாடும் அணியில் இடம் பெற்றால் ஆசிய விளையாட்டில் ஒரு அரிய வரலாற்றுச் சாதனையைப் படைப்பார்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஒட்டுமொத்த நாடுகளின் வீரர், வீராங்கனைகளிலேயே மிகக் குறைந்த வயதுடைய வீரர் என்ற மாபெரும் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைக்கும் வாய்ப்பு கிடைக்கும். இவரது வயது வெறும் 15 மட்டுமே. அதேபோல், இந்த ஆசிய விளையாட்டுத் தொடரிலேயே அதிக வயதுடைய வீராங்கனை என்ற சாதனையும் இந்தியாவிடமே உள்ளது. இந்தியாவின் 55 வயதான குதிரையேற்ற வீராங்கனை ஸ்ருதி இப்பெருமையைப் பெற்றுள்ளார்.

உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் ஐபிஎல் அரங்கில் பட்டையைக் கிளப்பிய வைபவ் சூர்யவன்ஷி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். பின்னர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அணியில் இடம்பிடித்தும் அவருக்கு 11 பேர் கொண்ட விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சர்வதேச டி20 அரங்கில் இந்திய அணிக்காக இதுவரை 6 போட்டிகளில் களமிறங்கியுள்ள வைபவ், 189.21 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டுடன் 193 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 81 ரன்கள் ஆகும்.

ஆசிய விளையாட்டின் 2-வது காலிறுதிப் போட்டியில் நேரடியாகக் களமிறங்குவதற்கு முன்பாக, இந்திய அணி ஜப்பானுடன் செப்டம்பர் 22 அன்று ஒரு நட்புரீதியான டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28 முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டி20 அணி விளையாட உள்ளது.