📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 11, 2026 03:34 AM

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு..! அபராத தொகை ரூ.2,500ஆக அதிகரிப்பு..!!

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு..! அபராத தொகை ரூ.2,500ஆக அதிகரிப்பு..!!

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் சென்னையும் முன்னணி இடத்தில் உள்ளது. சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசல்களை கவனத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலைகளின் வழியாக பயணிக்கும் பொழுது , போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரம் சாலையில் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் உள்ளது.

இது போன்ற சூழல்களில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மெட்ரோ ரயில்வே சிறந்த தீர்வாக இருக்கிறது. மெட்ரோ ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பயணிகளின் வசதிகளை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கும் வகையிலும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.

மெட்ரோ ரயில் பொதுப் போக்குவரத்து என்பதால், அதில் பயணம் மேற்கொள்ளும் சக பயணிகளின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் இருப்பது மற்ற பயணிகளின் கடமையாகும். சமீப காலமாக பயணிகளுக்கு ஒரு சிலர் அடிக்கடி தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொள்வது பற்றிய புகார்கள், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வண்ணம் மெட்ரோ ரயில் சட்டம் 2002, பிரிவு 59-ன் கீழ், பின்வரும் செயல்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட உள்ளது.

• மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பொழுது செல்போன்களில் மற்றவர்களை தொந்தரவு செய்யும் வகையில் அதிக சத்தத்துடன் பேசுவது

• செல்போன்களில் சத்தமாக பாட்டு வைத்து கேட்பது , வீடியோ பார்ப்பது , ப்ளூடூத் ஸ்பீக்கர் சாதனங்கள் மூலம் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யும் வழியில் சத்தம் எழுப்புவது

​• காதுகளில் ஹெட்போன் அல்லது இயர்போன் மாட்டாமல் , மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யும் அறையில் பாடல்களை ஒளிபரப்புவது , லவுட் ஸ்பீக்கரில் பேசுவது போன்றவை மற்றவர்களை தொந்தரவு செய்வதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கருதுகிறது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) கடந்த ஜூன் 19, 2026 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026 இன் கீழ் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில்வே நிர்வாகம் புதிய அபராத தொகைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

முன்பு பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு செய்யும் செயல்களை செய்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பயணிகளில் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அபராத தொகை 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விதிகளை தொடர்ந்து அத்துமீரும் நபர்களை, உடனடியாக அந்த இடத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது, என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் என்பது அனைவருக்கும் ஆன ஒரு பொது சொத்தாகும் , அதை சுத்தமாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு. பயணிகள் அனைவரும் பயணத்தின் பொழுது மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க ஹெட்போன்களை பயன்படுத்தி, குறைந்த சப்தத்துடன் பேசுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மெட்ரோ ரயில்மட்டுமல்லாமல் , பஸ் , வேன் ஷேர், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்துகளை பயன்படுத்தும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பயணிப்பது தான் நாகரீக சமூகத்தில் அடிப்படையாகும்.