மாற்றுத்திறனாளி மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூர கும்பல்!
செங்கல்பட்டு,
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து, கால் நடக்க முடியாத 5-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கால் நடக்க முடியாத மாற்றுதிறனாளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்றுள்ளனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.