📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 14, 2026 09:34 AM

குமரி லாக்கப் மரணம்: "சாத்தான்குளம் வழக்கைப் போன்று உள்ளது"

குமரி லாக்கப் மரணம்: "சாத்தான்குளம் வழக்கைப் போன்று உள்ளது"

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரி வர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர் வீட்டுக்கு அருகில் கடை வைத்திருந்தார்.

இவர் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றதாக கடந்த 9-ம் தேதி, தென்தாமரைக் குளம் போலீஸார் சோதனை நடத்தி கடையில் இருந்து குட்கா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து சபரிவர்மனைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைத்தனர்.

இதற்கிடையே இன்று (ஜூலை 13) காலை சிறையில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சபரி வர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. இதற்கிடையே சபரி வர்மனின் உடலைப் பார்த்த உறவினர்கள் உடலில் காயம் உள்ளதாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது குறித்து சபரி வர்மனின் உறவினர் விநாயக மூர்த்தி கூறுகையில், "சபரிவர்மன் மாற்றுத்திறனாளி. அவரது உடல் முழுவதும் அடித்த காயங்கள் உள்ளன. உடல் பகுதிகள் சிவந்திருக்கிறது. அவரது முகம் மிகவும் கறுத்துப்போய் உள்ளது.