📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 28, 2026 04:03 AM

கடத்தல் காரின் மீது 40 கி.மீ., பயணித்து சினிமா பாணியில் குட்கா கும்பலை பிடித்த ஏட்டு கோவை அருகே பரபரப்பு சம்பவம்

கடத்தல் காரின் மீது 40 கி.மீ., பயணித்து சினிமா பாணியில் குட்கா கும்பலை பிடித்த ஏட்டு கோவை அருகே பரபரப்பு சம்பவம்

கோவை: கோவை அருகே, குட்கா கும்பலை பிடிக்க முயன்ற போது, குட்கா கடத்திய காரின் மீது, 40 கி.மீ., துாரம், ஆபத்தாக படுத்தபடி போலீஸ் ஏட்டு பயணித்தார். சினிமா ஷூட்டிங் போல நடந்த இந்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது.

கோவை -- சத்தி தேசிய நெடுஞ்சாலையில், தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக, கோவில் பாளையம் போலீசாருக்கு அதிகாலையில் தகவல் கிடைத்தது.

கோவில்பாளையம் எஸ்.ஐ., விக்னேஷ், போலீஸ் ஏட்டு வேல்முருகன் ஆகிய இருவரும் நேற்று காலை 5:45 மணிக்கு அங்கு வாகன சோதனை நடத்தினர். அப்போது, கர்நாடக பதிவெண் உடைய, 'ஹூண்டாய் கிரேட்டா' கார் வந்தது.

போலீசார் அந்த காரை நிறுத்தினர். காரில் வந்தவர்களிடம், எஸ்.ஐ., விக்னேஷ் விசாரித்துக் கொண்டிருந்தார். போலீஸ் ஏட்டு வேல்முருகன், 38, காரின் மீதுள்ள கம்பியை பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.

எஸ்.ஐ., விசாரித்துக் கொண்டிருந்த போதே, காரில் இருந்தவர்கள் திடீரென காரை வேகமாக கிளப்பினர். அப்போது, சுதாரித்த ஏட்டு வேல்முருகன், கம்பியை பிடித்து, காரின் மேல்பகுதியில் ஏறிக்கொண்டார்; பக்கவாட்டு கம்பியை பிடித்துக் கொண்டு, படுத்தபடி ஆபத்தாக பயணித்தார்.

காரை நிறுத்தவில்லை

இந்நிலையில், அவிநாசி மற்றும் கோவை போலீசார், கோவை சாலையில் அன்னபூர்ணா ஹோட்டல் அருகே அந்த காரை மடக்கி பிடித்தனர். காரிலிருந்து மூவரையும் கோவில்பாளையம் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் மூவரும், ராஜஸ்தான் மாநிலம், சன்சூர் மாவட்டம் பாபு தாரா, 27, மர்மீர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 23, ஜலோரைச் சேர்ந்த சுரேஷ், 20, என, தெரியவந்தது.

மூவரும் பெங்களூருவில் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ குட்காவை, கோவை மாவட்ட கடைகளுக்கு வினியோகிக்க, காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, காரையும், 300 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

குவியும் பாராட்டு காரின் மீது ஏட்டு வேல்முருகன் அபாய நிலையில் படுத்தபடி, 40 கி.மீ., பயணித்தது வலைதளங்களில் பரவியது. மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, கோவை சரக டி.ஐ.ஜி., சுவாமிநாதன், கோவை ரூரல் எஸ்.பி., பவன்குமார் ஆகியோர், அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். அமைச்சர்கள் சம்பத்குமார், விக்னேஷ், கமலி ஆகியோர் வேல்முருகனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பாராட்டினர். இந்த சம்பவத்தை பார்த்த பலரும் அவரை பாராட்டினர். வேல்முருகன் கூறுகையில், ''நான், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே குறுத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவன். 2011ல் போலீஸ் பணியில் சேர்ந்தேன். மாவட்ட அளவிலான கபடி அணியில் பங்கேற்றுள்ளேன். உடன் பிறந்த சகோதரர் முனியசாமி விருதுநகரில் ஏட்டாக பணிபுரிகிறார். அனைத்து தரப்பினரின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.