📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
பெற்ற மகனை கொன்று உடலை கூறு போட்டு ஆற்றில் வீசிய கட்சி நிர்வாகி: 3 ஆண்டுகளுக்கு பிறகு நண்பருடன் அதிரடி கைது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: சிறுவன் உள்பட 5 பேர் கைது தென்மேற்கு பருவமழை தீவிரம் பல மாநிலங்களில் கனமழை கொட்டியது: டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்டில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க ஐகோர்ட் நிபந்தனை தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் "தமிழ் முருகன்" சென்னை: சென்னை மெட்ரோ இரயிலில் விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வா

Latest News July 11, 2026 04:33 AM

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குடும்பத்துக்கு அரசு வேலை இல்லை

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குடும்பத்துக்கு அரசு வேலை இல்லை

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 37 குடும்​பங்​களை சேர்ந்த 41 பேர் உயி​ரிழந்த நிலை​யில், 31 பேரின் குடும்​பங்​களைச் சேர்ந்த தலா ஒரு​வருக்கு அரசு வேலை​யும், ஒரு​வருக்கு ரூ.10 லட்​சம் கருணை தொகை​யும் வழங்​கப்​பட்​டது.

மீதம் உள்ள 5 குடும்​பங்​களில் மனைவி சுகன்​யாவை இழந்த தெய்​வேந்​திரன் காவல்​துறை​யில் பணி​யாற்​று​வ​தா​லும், மற்​றொரு​வர் அரசு பணி​யில் உள்​ள​தா​லும், ஒரு குடும்​பத்​தில் உள்​ளவர்​கள் 60 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​கள் என்​ப​தா​லும், அவர்​களின் குடும்​பங்​களில் யாருக்​கும் அரசு வேலை வழங்​கப்​பட​வில்​லை.

மேலும், ஏமூரை சேர்ந்த காளியப்பன் மனைவி அருக்​காணி கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த நிலை​யில், அவரது குடும்​பத்​தில் வேலைக்கு செல்​லும் நிலை​யில் 3 பேர் உள்​ள​தால், ஒரு​வருக்கு வேலை வழங்​கி​னால் மற்ற இரு​வர் பாதிக்​கப்​படு​வார்​கள் எனக்​கூறி வேலை வேண்​டாம் என மறுத்​து​விட்​டனர். சேலத்தை சேர்ந்த கிருஷ்ண​மூர்த்தி கோமதி தம்​பதி மகன் ஸ்ரீநாத் உயி​ரிழந்த நிலை​யில் அவரது குடும்​பத்​தில் யாருக்​கும் வேலை வழங்​கப்​ப​டாத​தால் நேற்று அதி​காரி​களை சந்​தித்து முறை​யிட்​டனர்​.