📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 11, 2026 05:30 AM

தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் "தமிழ் முருகன்"

தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் "தமிழ் முருகன்"

இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. நடிகர் தனுஷ் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் "தமிழ் முருகன்" என்ற தலைப்பில் உருவாகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் "தமிழ் முருகன்" படத்தை அறிவுமதி எழுதுகிறார். இந்தப் படத்திற்கு, சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இதற்கான அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது. தனுஷின் wunderbar" மற்றும் ப்ரொடக்ஷன்ஸ் மைல்ஸ் டூ கோ நிறுவனங்கள் தயாரிப்பில், பண்டைய கால படமாக இது உருவாகிறது.

'தமிழ் மக்களுக்கும், நிலத்திற்கும் பாதுகாவலன், வீரன், மன்னன் மற்றும் தலைவன்" எனத் தலைப்பிட்டு, இதன் வீடியோவை நடிகர் தனுஷ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். கடவுள் முருகன் போல், கையில் வேல் ஏந்தி, நாயகன் யானையின் மீது அமர்ந்து வரும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

படத்தில், முருகன் வேடத்தில் தனுஷ் நடிப்பதாக தெரிகிறது. இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், தமிழ் கடவுள் முருகனை பற்றிய புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரிக்கப்படுவதாகக் கூறி தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் "தமிழ் முருகன்" படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.