Tamil Nadu
October 16, 2026 12:02 PM
கோவை வந்த முதல்வர் விஜய் ரோடு ஷோ; வழிநெடுகிலும் திரண்டு தொண்டர்கள் வரவேற்பு
கோவை: பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காகவும், அடிக்கல் நாட்டுவதற்காகவும் முதல்வர் விஜய் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவிநாசி ரோடு வழியாக சுமார் 10 கி.மீட்டருக்கு ரோடு ஷோ நடத்தி வருகிறார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார். அதன்பிறகு, ரூ.408 கோடியில் முடிவு பெற்ற 89 திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். ரூ.34.72 கோடியில் 9,343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu