கவின் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ்(24), காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். கொலையான கவின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சாதிய நோக்கத்தோடு இந்த கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோரை போலீசார் முதலில் கைது செய்தனர். பின்னர் 9 மாதங்களுக்குப் பிறகு சுர்ஜித்தின் தாயாரும், எஸ்.ஐ.யுமான கிருஷ்ணகுமாரியையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.
குற்றப்பத்திரிகை ரத்து
முதலில் பாளையங்கோட்டை போலீசார் இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் கடந்த மாதம் 29-ந்தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், சுர்ஜித் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதன்படி காவல்துறை அதிகாரிகளான சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகியோர் கவின் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும், குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி, பெண்ணின் உறவினர் ஜெயபால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனிடையே விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஜெயபால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், வழக்கு விசாரணை தாமதமாகும் என்பதை கருத்தில் கொண்டு ஜெயபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.
மேல்முறையீடு