Tamil Nadu
October 16, 2026 01:01 PM
'நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறது'
சென்னையில் 1,000 'ஏசி' மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ரத்து செய்த தமிழக அரசு, மறு நாளே ரத்து அறிவிப்பை திரும்ப பெற்றது.
"தவறுதலாக டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவற்றை வாபஸ் பெறுகிறோம். டெண்டருக்கான காலக்கெடுவை நவம்பர் 4 வரை நீட்டிக்க வேண்டும்" என, தேசிய தகவல் மையத்திற்கு (NIC), சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) கடிதமும் எழுதியிருக்கிறது.
இந்நிலையில் தவெக அரசை விமர்சித்து பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu