📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 18, 2026 08:34 PM

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி உள்ளது: மருத்துவமனை புதிய அறிவிப்பு

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி உள்ளது: மருத்துவமனை புதிய அறிவிப்பு

சென்னை: வி.எஸ். பாபுவின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவாக இருப்பவர் வி.எஸ். பாபு. செப்.9ம் தேதி கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட, அன்றைய தினமே அவர், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என்பதை பற்றிய புதிய அறிவிப்பை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபு. உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு, அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

வி.எஸ். பாபு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தருகிறது.

இவ்வாறு மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.