📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 18, 2026 09:31 PM

துணை ஜனாதிபதியை சந்தித்த தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தினர்

துணை ஜனாதிபதியை சந்தித்த தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தினர்

தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில், இந்திய துணை ஜனாதிபதி திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை ஐதராபாத்தில் சந்தித்து, ஐதராபாத் உள்ளிட்ட தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் நலன் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.

இச்சந்திப்பில் தெலுங்கானா தமிழ்ச் சங்கத் தலைவர் எம்.கே. போஸ், பொதுச் செயலாளர் எஸ். ராஜ்குமார், பொருளாளர் நேரு மற்றும் உறுப்பினர்கள் சரவணகுமார், பிரபு, வாசன், பாலாஜி, சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்மொழி மற்றும் தமிழ் பண்பாட்டை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கும், குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட தமிழ் குடும்பங்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தெலுங்கானா தமிழ்ச் சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழர்களின் நலன் சார்ந்த முயற்சிகளுக்கு தேவையான வழிகாட்டுதலும் ஆதரவும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த துணை ஜனாதிபதிக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.