📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 13, 2026 01:35 AM

"கேலி செய்வது கோழைத்தனம்"

"கேலி செய்வது கோழைத்தனம்"

"கேலி செய்வது கோழைத்தனம்" - குஷ்பு மகள்களுக்கு நடந்த உருவக்கேலிக்கு நடிகை ராதிகா கண்டனம்

சமீபத்தில் வெளியான 'டபுள் ஆக்குபன்ஸி' திரைப்படத்தில் க்ரியேட்டிவ் தயாரிப்பாளராக அனந்திதா பணியாற்றியிருந்தார்.

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி ஆகியோரின் இரண்டாவது மகள் அனந்திதா.

இயக்குநர் மணிரத்னத்திடம் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார். சமீபத்தில் வெளியான 'டபுள் ஆக்குபன்ஸி' திரைப்படத்தில் க்ரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியிருந்தார்.

இந்தப் படம் தொடர்பான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது அவரது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்து பலரும் உருவக்கேலி செய்திருந்தனர். அதற்கு அவர் பேட்டிகளில் பதிலடியும் கொடுத்திருந்தார்.

அதேபோல சமீபத்தில் திருமணம் முடிந்த குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவும் உருவக்கேலியைச் சந்தித்திருக்கிறார்.

இந்நிலையில் குஷ்புவின் மகள்களுக்கு ஆதரவாக நடிகை ராதிகா குரல் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பேச்சுரிமை என்பது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கான உரிமை அல்ல.

ஒரு பொது நபரின் மகள்களைக் கேலி செய்வது நகைச்சுவை ஆகாது. அது கோழைத்தனமான செயல். ஒருவரது தோற்றம் என்பது சாதனையும் அல்ல, தோல்வியும் அல்ல. அவரது குணாதிசயமே முக்கியமானது.

நான் குஷ்பு மற்றும் அவரது மகள்களுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற தரமற்ற செயல்களில் யார், எங்கு ஈடுபட்டாலும் அதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஒரு பெண்ணை விமர்சிக்கலாம், ஆனால் அவளுடைய குழந்தைகளைக் கேலி செய்வது நாகரிகம் அல்ல. அது ஒரு சமூகத்தின் ஒழுக்கத் தோல்வி'' என்று பதிவிட்டிருக்கிறார்.