📅 Wednesday, 28 October 2026 IST | ஐப்பசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 21, 2026 08:04 AM

காவ்யா மாறன் சுத்தமானவர்தான்.. ஆனால் அனிருத்தான்.. எல்லை மீறி பேசிய பிரபலம்

காவ்யா மாறன் சுத்தமானவர்தான்.. ஆனால் அனிருத்தான்.. எல்லை மீறி பேசிய பிரபலம்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்துக்கும், தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யாவுக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் அதிகம் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான சேகுவேரா இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

இந்திய அளவில் ஃபேமஸானவர் அனிருத். கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்துவருகிறார். அவருக்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன். அவர் ஐபிஎல்லில் ஹைதரபாத் அணிக்கு முதலாளியாக இருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேருக்கும் காதல் என்றும், விரைவில் திருமணம் என்றும் கூறப்படுகிறது.

எப்போது திருமணம்?: முதலில் அந்தத் தகவல்கள் எல்லாம் அரசல் புரசலாகத்தான் வந்திருந்தது. ஆனால் நடிகரும், அனிருத்தின் உறவினருமான ஒய்.ஜி. மகேந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்திவிட்டார். இது ஒருபக்கம் இருக்க அவர்களது திருமணம் நவம்பர் பத்தாம் தேதி க்ரீஸ் நாட்டில் பிரமாண்டமாக நடக்கும் என தெரிகிறது. இந்நிலையி பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இந்தத் திருமணம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

சேகுவேரா பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "அனிருத் - காவ்யா திருமணம் பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்கிறது. திருமணத்துக்கு அனிருத்தும், காவ்யாவும் ஓகே சொன்னாலே போதும் என்று இரண்டு குடும்பத்திலும் நினைத்தார்கள். கலாநிதி மாறன் குடும்பத்துக்கு 5000 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. அனிருத் குடும்பத்துக்கு 500 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. இதில் முழுக்க முழுக்க காவ்யாவின் விருப்பம்தான் பிரதானமாக இருக்கிறது. அனிருத்துக்கும் விருப்பம்தான்.

காவ்யாவின் பிடிவாதம்: அனி மீது காவ்யாவுக்கு காதல் ஏற்பட்டுவிட்டது. ஒருகட்டத்தில் குடும்பத்தினர் தள்ளிப்போட்டார்கள். ஆனால் காவ்யா பிடிவாதமாக நின்றதால் ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் நினைத்தால் செவ்வாய் கிரகத்திலேயே திருமணம் நடத்தலாம். ஆனால் சிம்ப்பிளாக நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் க்ரீஸ் நாட்டுக்கு செல்கிறார்கள். உறவினர்களை மட்டும்தான் அழைத்து செல்வார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள்தான் டிக்கெட் போட்டு அழைத்து செல்கிறார்கள்.

பெண் வீட்டில் யோசிப்பார்கள்: இந்தக் கலாசாரம் நெப்போலியனின் மகன் திருமணத்தில்தான் ஆரம்பித்தது. அனிருத்துக்கு எந்த அரசியல் பின்புலமும் தேவையில்லை. அவர்கள் குடும்பமே சாதாரண குடும்பம்தான். ரஜினியால் மட்டும்தான் அவர்கள் குடும்பம் பிரபலமானது. அதனால்தான் வெளிச்சம் பெற்றது. நாடக பாரம்பரியம் இருக்கிறது அவ்வளவுதான். ஒய்ஜி, ரஜினி குடும்பத்தில் நிறைய விவாகரத்துகள் நடந்திருக்கின்றன. அதுகுறித்து பெண் வீட்டில் யோசிப்பார்கள்தான். ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

காவ்யா பரிசுத்தமானவர்: மிடில் கிளாஸில்தான் அப்படி யோசிப்பார்கள். பணக்கார வீடுகளில் மனம் ஒத்திருந்தால் வாழ்வார்கள்; இல்லையென்றால் பிரிந்துவிடுவார்கள். கலாநிதி மாறன் குடும்பம் க்ளீனாக இருப்பார்கள்.அவரது தந்தை முரசொலி மாறனும், சகோதர தயாநிதி மாறனும் பெர்சனல் வாழ்க்கையில் பரிசுத்தமானவர்கள். காவ்யாவும் அப்படித்தான். இந்தப் பக்கம் அனிருத்தோ அப்படி இல்லை.

எல்லோருக்கும் தெரியும்: அவரது கடந்த கால வாழ்க்கை எல்லாம் எல்லோருக்கும் தெரியும். இந்த நேரத்தில் அதை பற்றி பேச வேண்டாம். இத்திருமணத்துக்கு ரஜினிகாந்த் கண்டிப்பாக வருவார். அம்பானி குடும்ப திருமணத்தில் ரஜினி நடனமே ஆடினார். இங்கே வராமலா இருப்பார்? அவர்தான் முதல் ஆளாக செல்வார் பாருங்கள். இல்லையென்றால் குடும்பத்தில் குழப்பம் வந்துவிடும்" என்றார்.