ஒரே நாளில் 7% வரை உயர்ந்த PNB பங்கு விலை, காரணம் என்ன?
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), கேப்ரியல் இந்தியா ( Gabriel India ) மற்றும் கரூர் வைஸ்யா வங்கி ( Karur Vysya Bank ) ஆகியவற்றின் பங்குகள் நிஃப்டி 500 (Nifty 500) குறியீட்டை உயர்த்த உதவின. அதே சமயம், அர்பன் கம்பெனி, ஃபெடரல் வங்கி ( Federal Bank ) மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகள் இந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தன. ஃபெடரல் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபத்தைப் பதிவு செய்திருந்தாலும், அவற்றின் நிதி முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்த மூன்று நிறுவனங்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.பஞ்சாப் நேஷனல் வங்கி ( PNB ) பங்குகள் சந்தை தொடங்கியபோது 7% வரை உயர்ந்தன. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை இப்பங்குகள் 0.09% சரிவையும், கடந்த ஓராண்டில் சுமார் 5% வளர்ச்சியையும் கண்டுள்ளன. இவை, தங்களின் 52 வார உச்ச விலையான ரூ. 135.15-லிருந்து 9% சரிவில் உள்ளன. பங்குச்சந்தையில் 3 கோடிக்கும் அதிகமான பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன. இது கடந்த 10 நாட்களின் சராசரி வர்த்தக அளவை விட 2.54 மடங்கு அதிகம்.கேப்ரியல் இந்தியா பங்குகள் சந்தை தொடங்கியபோது 6%-க்கும் மேல் உயர்ந்தன. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 48%-க்கும் அதிகமாகவும், கடந்த ஓராண்டில் 19%-க்கும் அதிகமாகவும் இப்பங்குகள் வளர்ச்சி கண்டுள்ளன. இவை, தங்களின் 52 வார உச்ச விலையான ரூ.1,600-லிருந்து 3.4% சரிவில் உள்ளன. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன. இது கடந்த 10 நாட்களின் சராசரி வர்த்தக அளவை விட 4.20 மடங்கு அதிகம்.கரூர் வைஸ்யா வங்கி பங்குகள் சந்தை தொடங்கியபோது 5% உயர்ந்து, ரூ.374.95 என்ற புதிய உச்ச விலையை எட்டின. பின்னர், வர்த்தகத்தின் போது ஏற்பட்ட சரிவால் இந்த உயர்வு சற்று குறைந்தது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 36%-க்கும் அதிகமாகவும், கடந்த ஓராண்டில் 56%-க்கும் அதிகமாகவும் இப்பங்குகள் வளர்ச்சி கண்டுள்ளன. சுமார் 36 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன. இது கடந்த 10 நாட்களின் சராசரி வர்த்தக அளவை விட 0.81 மடங்கு ஆகும். சந்தை தொடக்கத்தில் அதிக சரிவைச் சந்தித்த பங்குகள்அர்பன் கம்பெனி நிறுவனத்தின் பங்குகள் சந்தை தொடக்கத்தில் 7%-க்கும் மேல் சரிந்தன. அந்நிறுவனம் ரூ.182.5 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 59 கோடியாக இருந்தது. வருவாய் 41.4% அதிகரித்து ரூ.380 கோடியிலிருந்து ரூ.537.3 கோடியாக உயர்ந்தாலும், செயல்பாட்டு இழப்பு ரூ.68.4 கோடியிலிருந்து ரூ.187.6 கோடியாக அதிகரித்துள்ளது.நிறுவனத்தின் வாரியம், பங்குகள் மற்றும் மாற்றத்தக்க பத்திரங்கள் மூலம் ரூ.2,500 கோடி வரை நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது. அதன் இன்ஸ்டா ஹெல்ப் சேவையில் ஆர்டர்களின் அளவு முந்தைய காலாண்டை விட 63% அதிகரித்து 6.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2028 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் செயல்பாட்டு லாப-நஷ்ட சமநிலையை எட்டும் இலக்கை நோக்கி நிறுவனம் தொடர்ந்து பயணிப்பதாகத் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 12%-க்கும் மேல் உயர்ந்திருந்த இந்தப் பங்கு, கடந்த ஓராண்டில் சுமார் 5% சரிவைச் சந்தித்துள்ளது. இது தனது 52 வார உச்ச விலையான ரூ.183.97-லிருந்து 25% சரிவிலும், 52 வார குறைந்த விலையான ரூ. 100.70-லிருந்து 46% தொலைவிலும் உள்ளது. சுமார் 53 லட்சம் பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன. இது கடந்த 10 நாட்களின் சராசரி வர்த்தக அளவைப் போல 0.92 மடங்கு ஆகும்.அக்டோபர் 16, வெள்ளிக்கிழமை அன்று சந்தை முடிந்த பிறகு வெளியிடப்பட்ட இரண்டாம் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, ஃபெடரல் வங்கி பங்குகள் சந்தை தொடக்கத்தில் 5% வரை சரிந்தன. வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 45.1% அதிகரித்து, ரூ.955 கோடியிலிருந்து ரூ.1,386 கோடியாக உயர்ந்துள்ளது. வைப்புத்தொகைகளுக்கான வட்டி வழங்கப்பட்ட பிறகு, கடன்கள் மூலம் ஈட்டப்படும் நிகர வட்டி வருமானம் 26.4% அதிகரித்து, ரூ.2,495.2 கோடியிலிருந்து ரூ.3,153.4 கோடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம், இதர வருமானம் 37.7% அதிகரித்து ரூ.1,490 கோடியாக உள்ளது. மொத்த வாராக் கடன் விகிதம் முந்தைய காலாண்டில் இருந்த 1.52%-லிருந்து 1.32%-ஆகக் குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதம் 0.18%-லிருந்து 0.17%-ஆகக் குறைந்துள்ளது. சாத்தியமான வாராக் கடன்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி , முந்தைய காலாண்டில் ரூ.318 கோடியாகவும், அதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.363 கோடியாகவும் இருந்த நிலையில், தற்போது ரூ.342 கோடியாக உள்ளது.இந்த நிறுவனத்தின் பங்குகள் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 22%-க்கும் அதிகமாகவும், கடந்த ஓராண்டில் சுமார் 44%-க்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளன. தற்போது, இவை தங்களின் 52 வார உச்ச விலையான ரூ.371.70-லிருந்து 13.8% சரிவில் உள்ளன. சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன. இது கடந்த 10 நாட்களின் சராசரி வர்த்தக அளவைப் போல 0.37 மடங்கு ஆகும்.அக்டோபர் 17, சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட இரண்டாம் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் சந்தை தொடங்கியவுடன் 4% சரிந்தன. வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 37.6% அதிகரித்து ரூ.7,003.3 கோடியாக உள்ளது.நிகர வட்டி வருமானம் 11.8% அதிகரித்து ரூ.15,372 கோடியாக உள்ளது. இது ரூ.14,970 கோடி என்ற கணிப்பை விட அதிகம். அதே சமயம், செயல்பாட்டு லாபம் 6.4% அதிகரித்து ரூ.11,083 கோடியாக உள்ளது. இது ரூ.11,761 கோடி என்ற கணிப்பை விடக் குறைவு. நிகர வட்டி வரம்பு ,அதாவது வங்கி கடன்கள் மூலம் ஈட்டும் வருவாய்க்கும், வைப்புத்தொகைகளுக்கு வழங்கும் வட்டிக்கும் இடையிலான வித்தியாசம் முந்தைய காலாண்டில் இருந்த 3.46%-லிருந்து 3.36%-ஆகக் குறைந்துள்ளது.மொத்த வாராக் கடன் விகிதம் 1.28%-லிருந்து 1.16%-ஆகவும், நிகர வாராக் கடன் விகிதம் 0.39%-லிருந்து 0.35%-ஆகவும் குறைந்துள்ளன. வாராக் கடன்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, முந்தைய காலாண்டில் இருந்த ரூ.2,223 கோடியிலிருந்து ரூ.1,694 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து அந்தப் பங்கின் விலை சுமார் 3% சரிந்துள்ளது. கடந்த ஓராண்டில் சுமார் 1% சரிவைக் கண்டுள்ளது. இது, தனது 52 வாரக் குறைந்த விலையான ரூ.1,150.30-லிருந்து 7.4% தொலைவில் உள்ளது. சுமார் 34 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன. இது அப்பங்கின் 10 நாள் சராசரி வர்த்தக அளவைப் போல 0.44 மடங்கு ஆகும்.