📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 19, 2026 04:00 PM

நாமக்கல் கவிஞரின் தமிழ் தொண்டும் தேசப்பற்றும் போற்றுதலுக்குரியவை; அண்ணாமலை

நாமக்கல் கவிஞரின் தமிழ் தொண்டும் தேசப்பற்றும் போற்றுதலுக்குரியவை; அண்ணாமலை

நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளையின் தமிழ்த் தொண்டும், தேசப்பற்றும் என்றும் போற்றுதலுக்குரியவை என்று அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக, வீ த லீடர்ஸ்' அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

பிறந்த தினம்

மகாகவி பாரதியார்

'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்ற தனது பாடலின் மூலம், அகிம்சை வழியில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உத்வேகமளித்து, கவிதையையே விடுதலை போராட்டத்தின் ஆயுதமாக மாற்றியவர். மகாகவி பாரதியாரால் பாராட்டப்பட்டவர்.

தமிழக அரசவை கவிஞராக போற்றப்பட்டதுடன், பத்மபூஷன் விருதும் பெற்று நாட்டின் பெருமைக்குரிய கவிஞராக திகழ்ந்த நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளையின் தமிழ் தொண்டும், தேசப்பற்றும் என்றும் போற்றுதலுக்குரியவை.

இவ்வாறு அதில் கூறினார்.