📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 14, 2026 06:33 PM

கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. முதன்முறையாக அரையிறுதியில் டாப் 4 அணிகள்

கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. முதன்முறையாக அரையிறுதியில் டாப் 4 அணிகள்

கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. முதன்முறையாக அரையிறுதியில் டாப் 4 அணிகள்

டல்லாஸ்: கால்பந்து உலகக் கோப்பை தொடர் வரலாற்றிலேயே முதன்முறையாக, தரவரிசையில் முதல் 4 இடங்களில் உள்ள பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா 2026 உலகக்கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளன.

2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் 48 அணிகள் பங்கேற்றன. இதில் குரூப் சுற்றுப் போட்டிகள், ரவுண்ட் ஆஃப் 32, ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதிப் போட்டிகள் என மொத்தம் 100 போட்டிகள் நடந்தன. அதன் முடிவில் 4 அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதிப் போட்டிகள் இன்று (இந்திய நேரப்படி ஜூலை 15 நள்ளிரவு 12.30 மணிக்கு) தொடங்குகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதியில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் உலகக்கோப்பை தொடரிலேயே அதிக கோல்களை (16 கோல்கள்) அடித்துள்ள பிரான்ஸ் அணிக்கும், 6 போட்டிகளில் வெறும் 1 கோல் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ள ஸ்பெயின் அணிக்கும் இடையே கடும் போட்டி நடக்க உள்ளது. பிரான்ஸ் அணியின் கிலியன் எம்பாப்பே 8 கோல்களுடன் தங்கக் காலணிக்கான பட்டியலில் முன்னிலையில் உள்ளார். மறுபுறம், ஸ்பெயின் அணி தொடர்ந்து 36 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் பெரும் பலத்துடன் களமிறங்குகிறது.

அடுத்ததாக ஜூலை 16 அன்று அட்லாண்டா மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணியில் ஜூட் பெல்லிங்ஹாம் மற்றும் கேப்டன் ஹாரி கேன் என இரு வீரர்கள் தலா 6 கோல்களுக்கு மேல் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

அவர்களை எதிர்கொள்ளும் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, கடந்த போட்டியில் சுவிட்சர்லாந்தை 3-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு வந்துள்ளது. காலிறுதியில் இரு அணிகளும் தலா 6 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளதால், இந்த ஆட்டம் அதிக கோல்கள் அடிக்கப்படும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.