📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 14, 2026 05:33 PM

IND vs ENG: பும்ரா மாபெரும் சாதனை.. முதல் இந்திய பவுலர் என்ற பெருமை

IND vs ENG: பும்ரா மாபெரும் சாதனை.. முதல் இந்திய பவுலர் என்ற பெருமை

IND vs ENG: பும்ரா மாபெரும் சாதனை.. முதல் இந்திய பவுலர் என்ற பெருமை

பர்மிங்காம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது புதிய வரலாற்று சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 150 ஒருநாள் விக்கெட்டுகள், 200 டெஸ்ட் விக்கெட்டுகள் மற்றும் 100 டி20 விக்கெட்டுகள் என்ற அரிய சாதனையை நிறைவு செய்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், எதிரணி கேப்டன் ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பும்ரா தனது 150-வது ஒருநாள் விக்கெட்டைப் பதிவு செய்தார். இது இங்கிலாந்து மண்ணில் பும்ரா வீழ்த்திய 31-வது விக்கெட்டாகும். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் 30-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் தன்வசமாக்கியுள்ளார்.

ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இதற்கு முந்தைய சாதனையை பும்ரா கடந்துள்ளார்.மேலும், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றுள்ளார். வெறும் 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

பும்ரா கடைசியாக ஒருநாள் போட்டியை 2023 உலககோப்பை பைனலில் தான் விளையாடினார். 3 ஆண்டுக்கு பின் திரும்பினாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். பும்ராவின் பவுலிங்கை தொட முடியாமல் இங்கிலாந்து பேட்டர்கள் தடுமாறினர்.

பும்ரா 7 ஓவர் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். பும்ரா இல்லாததால் தான் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தடுமாறியது. ஆனால் அனைத்து போட்டிக்கும், எப்போதும் பும்ராவை நம்ப முடியாது என்பதால், இந்திய அணி புதிய பும்ராவை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.