📅 Sunday, 12 July 2026 IST | ஆனி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 11, 2026 11:32 PM

Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ்

Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ்

Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!

பாடகி ஜானகி தமிழில் 1957ம் ஆண்டு பாடிய முதல் பாடலும் 2018ம் ஆண்டு பாடிய கடைசி பாடலும் வெளியாகவே இல்லை.

இந்திய திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற பாடகி எஸ்.ஜானகி. இவரது பாடல்களுக்கு என்று உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என 17 மொழிகளில் பாடியுள்ளார்.

காலமானார் ஜானகி:

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜானகி இன்று மைசூரில் காலமானார். அவரது மறைவால் இந்திய திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. 17 மொழிகளில் பாடியிருந்தாலும் அவர் தமிழ் மொழியிலே ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

முதல் பாடலே சோக பாடல்:

ஜானகி கடந்த 1957ம் ஆண்டு முதல் பாடி வருகிறார். இவர் தமிழில் முதன் முதலாக விதியின் விளையாட்டு என்ற படத்தில்தான் பாடினார். அந்த படத்தில் என் ஆசை பாழானது ஏனோ என்ற சோக பாடலை பாடியிருப்பார். அந்த படத்திற்கு சலபதி ராவ் இசையமைத்திருப்பார். ஆனால், அந்த படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. அதே ஆண்டு அவர் கன்னட படத்திலும் பாடினார்.

விதியின் விளையாட்டு படம் வெளியாகாத சூழலில், 1957ம் ஆண்டு வெளியான மகதாள நாட்டு மேரி என்ற படம்தான் தமிழில் அவர் பாடிய முதல் படமாக அமைந்தது. இந்த படத்தில் எம்பி சிவம் இசையில் அவர் கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை என்ற பாடலை பாடியிருப்பார். அதன்பின்னர், தமிழில் மறக்கவே முடியாத ஏராளமான பாடல்களை பாடியிருப்பார்.

6 தலைமுறை இசையமைப்பாளர்கள்:

விஸ்வநாதன் ராமமூர்த்தி, கேவி மகாதேவன், ஏ.எம்.ராஜா, டி.ஆர்.பாப்பா, சலபதிராவ், சுதர்சனம், சங்கர் கணேஷ், இளையராஜா, கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், டி.ராஜேந்தர், சிற்பி, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், பரணி, யுவன்ஷங்கர்ராஜா, தீனா, அனிருத் என அனைத்து ஜாம்பவான்கள் இசையிலும் பாடியுள்ளார். சுமார் 6 தலைமுறை இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.

கடைசி பாடல்:

கடைசியாக அவர் தமிழில் பன்னடி என்ற படத்தில் ராஜேஷ் ராமலிங்கம் இசையில் பாடினார். ஆனால், அந்த படம் வெளியாகவில்லை. தமிழில் அவர் கடைசியாக ஜீவா நடித்த திருநாள் படத்தில் பாடியுள்ளார். அதில் அவர் தந்தையும் யாரோ என்ற சோகப் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருப்பார்.

தமிழில் கடைசியாக அவர் குரலில் வெளியான பாடல் இதுவே ஆகும். முதல் பாடல் சோகமாக பாடிய நிலையில், அவரது குரலில் வெளியான கடைசி பாடலும் சோகமாகவே வெளியாகியுள்ளது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அவரது குரலில் உருவான முதல் பாடலும் தமிழில் வெளியாகவில்லை. அவர் பாடிய கடைசி பாடலும் தமிழில் வெளியாகவில்லை.

ஜானகி மறைந்தாலும் அவரது பாடல்கள் தமிழ் சினிமா இருக்கும் வரை அழியாமல் நிலைத்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அவரது மறைவிற்கு இந்திய திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி