📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 11, 2026 07:33 AM

'It's over..' மீண்டும் ஈரான்

'It's over..' மீண்டும் ஈரான்

'It's over..' மீண்டும் ஈரான்-அமெரிக்கா போர் தொடக்கமா..? ஆவேசமாக ட்ரம்ப் சொன்னது என்ன?

இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் அயத்துல்லா காமேனி உட்பட ஈரானின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் வளைகுடா அமெரிக்க தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை குறிவைத்து கடும் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான், கத்தார் முயற்சியால் ஏற்பட்ட போர் நிறுத்தம் நீடிக்காமல், கப்பல் தாக்குதல் குற்றச்சாட்டை தொடர்ந்து மீண்டும் மோதல் வெடித்த நிலையில், நேட்டோ உச்சிமாநாட்டில் டிரம்ப் “இரானுடனான ஒப்பந்தம் முடிந்தது, பேச்சுவார்த்தை நேர விரயம்” என ஆவேசமாக அறிவித்தது, புதிய போர் அச்சத்தை தூண்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதோடு நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர்.

எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதலை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது.

தொடர்ந்து போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தின. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாதம் கூட நீடிக்காமல் மீண்டும் தொடங்கியுள்ளது. சமீபத்தில் ஹோர்முஸ் நீரிணையில் சென்ற கப்பலை தாக்கியதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தொடங்கியது.

இந்த நிலையில், துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், என்னைப்பொறுத்தவரை இரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது (It's over) என்று மிகவும் ஆவேசமாக அறிவித்துள்ளார். மேலும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வெறும் நேர விரயம் என்றும், என்னைப்பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது, நான் இனி அவர்களுடன் எந்த உடன்பாடும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் இந்த போர் மீண்டும் தொடரும் என அச்சம் எழுந்துள்ளது.