📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 16, 2026 04:34 AM

இந்தியா - ஆப்கானிஸ்தான் 2

இந்தியா - ஆப்கானிஸ்தான் 2

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 தொடரின் 2-வது ஆட்டம் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 156 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 64 ரன்கள் எடுத்தது மட்டுமே அந்த அணிக்கு பெரிய ஆறுதலாக அமைந்தது.

தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் ஆப்கானிஸ்தானால் பெரிய ஸ்கோரை உருவாக்க முடியவில்லை.

157 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தினார். அவர் 32 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இஷான் கிஷன் 42 ரன்கள் எடுத்து அவருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.

பின்னர் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் திலக் வர்மாவும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்தியா 38 பந்துகள் மீதமிருக்கும்போதே இலக்கை எட்டியது.இதனால் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியின் பேட்டிங் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக அபிஷேக் சர்மாவின் அதிரடி மீண்டும் தொடருமா என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டம் இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கக்கூடும்.

அதே நேரத்தில் இந்திய அணிக்கு ஒரு புதிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது. முதல் போட்டிக்குப் பிறகு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு பக்கவாட்டு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அவர் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்பு இந்த காயம் இந்திய அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரை, முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தொடக்க வீரர்கள் விரைவாக ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தால் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளிக்க முடியும். ரஷித் கான் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய முக்கியமான ஆட்டமாகவும் இது அமைகிறது.

மேலும், டெல்லி மைதானத்தின் சூழலும் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட்டுகளைப் பாதுகாத்து ரன்களை விரைவாகச் சேர்ப்பது இரு அணிகளின் வெற்றிக்கும் முக்கியமானதாக இருக்கும்.

நடுப்பகுதி ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களைச் சிறப்பாக எதிர்கொள்வதும், கடைசி ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதும் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமையலாம். ரசிகர்களுக்கு கிரிக்கெட் விருந்தை இந்தப் போட்டி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் அணித் தேர்வும் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தும் வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளிலும் தங்கள் இடத்தை உறுதி செய்ய முடியும்.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிடும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் தொடர் 1-1 என சமநிலைக்கு வரும். எனவே இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

முக்கிய பங்கு வகிக்கும் வேகப் பந்து வீச்சாளர்கள் தொடக்க ஓவர்களிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியும்.. மறுபுறம், ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் வலுவான பேட்டிங் வரிசையை சமாளிக்க சிறப்பான திட்டத்துடன் களமிறங்க வேண்டி இருக்கிறது..

குறிப்பாக இந்திய தொடக்க வீரர்களை விரைவாக வெளியேற்றுவது அந்த அணிக்கு சாதகமாக அமையும்... டெல்லி மைதானத்தில் பவுண்டரி களை விளாசும் திறமையும், விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடி ரன்கள் சேர்ப்பதும் போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம்..

இரு அணிகளிலும் இளம் வீரர்கள் இருப்பதால் அவர்களின் செயல்பாடுகளும் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும்.. எனவே ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக செல்லும் ஆட்டமாக இது அமையக் கூடும்.. வெற்றிக்காக இரு அணிகளும் தங்களது சிறந்த திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன..

இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களே வெற்றியைத் தீர்மானிக்கக் கூடும்.. தொடரைக் கைப்பற்ற இந்தியாவும் தொடரை சமன் செய்ய ஆப்கானிஸ்தானும் தீவிரமாக போராடும்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது..

பேட்டிங்,பந்து வீச்சு என இரு துறைகளிலும் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தொடரை வெற்றிகரமாக கைப்பற்றும் வாய்ப்பு நிச்சயம் அதிகரிக்கும்..

முதல் போட்டியின் வெற்றியைத் தொடருமா இந்தியா, அல்லது ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன் நடைபெறும் ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.