Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே ஜாலி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே ஜாலி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்று ஒரு சவரன் இவ்வளவு தானா.!!
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் இறுதியில் குறைந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளும் அதிரடியாக சரிந்துள்ளது. இன்றைய விலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
ஏறிய வேகத்தில் குறையும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த வாரம் திடீரென தினமும் சுமார் ஆயிரம் ரூபாய் முதல் 2ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 8 ஆயிரம் என்ற அளவில் விற்பனையான தங்கத்தின் விலையானது அதிரடியாக 1.20 லட்சத்தை எட்டியது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் திடீரென தங்கத்தின் விலையானது கடந்த வாரம் இறுதியில் குறைய தொடங்கியது. இன்றும் தங்கத்தின் விலையானது சரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்படும் கணிக்க முடியாத மாற்றங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதங்கள் குறித்த சந்தையின் எதிர்பார்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்கள் லாபம் பார்க்கும் நடவடிக்கைகள் போன்றவை தங்கம் விலை குறைவிற்கு காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏறி இறங்கும் தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை என்ன.?
தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 135 ரூபாய் குறைந்து 14,370 ரூபாய்க்கும், சவரனுக்கு 1080 ரூபாய் சரிந்து 1,14,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி