📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 14, 2026 12:04 PM

சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு

சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு

ரியாத்: ஈரான் ஆதரவுபெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவை குறிவைத்து தாக்கி வருகின்றனர். ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். 11 இந்தியர்கள் காயமடைந்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக கிங் காலித் சர்வதேச விமான நிலையம் அக்.,17 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்ப நினைக்கும் இந்தியர்கள் கத்தார், பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள விமானங்களின் மூலமாக நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களின் வசதிக்காக, 24 மணி நேரத் தூதரகக் கட்டுப்பாட்டு அறையை +966-1 1-488469 / WhatsApp: +966-536216082 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஜெட்டா மற்றும் மதீனாவுக்கு பயணம் செய்யும் இந்திய உம்ரா யாத்ரீகர்களுக்கும் ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத்தூதரகம் இதே மாதிரியான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.