நடுரோட்டுல காரை நிறுத்திட்டாரு.. கர்ப்பம்னு சொன்னதும் அலறி ஓடிய சுந்தர்.சி.. குஷ்பு சொன்ன ரகசியம்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து, தற்போது சுந்தர்.சியின் மனைவியாகவும், பாஜகவின் மாநில துணை தலைவராகவும் முத்திரை பதித்து வருபவர் நடிகை குஷ்பு. சமீபத்தில் இவரது மூத்த மகள் அவந்திகாவிற்கு கோலாகலமாக கோவாவில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தான் முதன்முதலில் கர்ப்பமான போது நடந்த ஒரு அட்ராசிட்டி சம்பவத்தை நேர்காணல் ஒன்றில் குஷ்பு சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார்.
குஷ்பு பேட்டி: அதில், நான் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகம் வந்ததும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த சுந்தர்.சிக்கு போன் பண்ணி சொன்னேன். உடனே அவர், நீ முதல்ல டாக்டர்கிட்ட போய் செக் பண்ணி கன்பார்ம் பண்ணிட்டு எனக்கு போன் பண்ணுனு சொன்னாரு. அப்போதான் மொபைல் போன் புதிதாக வந்திருந்த காலம்ங்கிறதால பல இடங்கள்ல சிக்னல் கிடைக்காது. அதனால் நான் 10 மணிக்கு ஃபோன் பண்றேன்... நீங்க சிக்னல் இருக்கும் இடத்தில் இருங்கனு சொல்லிட்டு டாக்டரை பார்க்கப் போனேன்.
சுந்தர்.சி பட்ட: போனை கையிலேயே பிடிச்சுக்கிட்டு, காரில் ஏறி சிக்னல் கிடைக்கும் இடத்தை தேடி அலைஞ்சிருக்காரு சுந்தர் சி. கடைசியா மெயின் ரோட்டுல வண்டியை யூ-டர்ன் அடிச்சப்போ அவருக்கு சிக்னல் கிடைச்சிருக்கு, உடனே வண்டியை இங்கேயே நிறுத்துனு டிரைவர்கிட்ட சொல்லியிருக்காரு. டிரைவர் சார் இது நடுரோடு சார்... மத்த வண்டி வரும் சார்னு பதறியிருக்காரு. பரவாயில்லை... 10 நிமிஷம் வண்டி இங்கேயேதான் இருக்கணும். பின்னாடி எந்த வண்டி வந்தாலும் நீ நகரவே கூடாதுனு சொல்லி ரோட்டிலேயே காரை நிறுத்தி காத்துக்கிட்டு இருந்திருக்காரு. அதுக்கப்புறம் நான் போன் பண்ணி 'ரிப்போர்ட் பாசிட்டிவ்... நான் கர்ப்பமா இருக்கேன்னு சொன்னதும் மனுஷன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை எனத் தன் முதல் கர்ப்பத்தின் போது சுந்தர்.சி காட்டிய பரபரப்பையும் அன்பையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் குஷ்பு.
காதல் திருமணம்: வருஷம் 16 படத்தில் அறிமுகமான குஷ்பு, வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், சின்ன தம்பி, சிங்காரவேலன், நாட்டாமை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் படு பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது தான் சுந்தர் சி இயக்கிய 'முறை மாமன்' திரைப்படத்தில் குஷ்பு கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும்,2000-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு அவந்திகா, ஆனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.