📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 15, 2026 03:03 AM

சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2027-ம் ஆண்டுக்கான மத்திய தேர்வாணைய குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீசஸ்) முதல் நிலைத் தேர்வுப் பயிற்சிக்கான, தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்ட மதிப்பீட்டுத் தேர்வு 2026-ல் வெற்றி பெற்றவர்களின் முழுமையான மதிப்பெண் பட்டியல், அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் இருந்து சென்னை முழுநேரப் பயிற்சிக்கு 225 நபர்கள், பகுதி நேரப்பயிற்சிக்கு 100 நபர்கள் மற்றும் மதுரை, முழுநேரப் பயிற்சிக்கு 100 நபர்கள், கோவை முழுநேரப் பயிற்சிக்கு 100 நபர்கள் என மொத்தமாக 525 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தரவரிசை மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வு சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் மட்டுமே நடைபெறும். விண்ணப்பப்பதிவு 14-ந்தேதி (இன்று) தொடங்கி 20-ந்தேதி முடிவடையும். 22-ந்தேதி அன்று முதற்கட்ட தெரிவு பட்டியல் வெளியாகும். கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடைபெறும். முதல்நிலைத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 28-ந்தேதி தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.