📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 12, 2026 11:34 PM

"அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்"

"அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்"

"அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

"அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும் போது அந்தந்த மாநிலங்களின் மாநிலப் பாடலுக்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்"- மத்திய உள்துறை அமைச்சகம்

அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பின்படி, அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும் போது அந்தந்த மாநிலங்களின் மாநிலப் பாடலுக்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இசைக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் நிறைவாக, இறுதிப் பகுதியாக தேசிய கீதமான 'ஜன கண மன' பாடப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தேசியப் பாடல், தேசிய கீதத்தை பாடும்போது அதன் அசல் வரிகள், சரியான உச்சரிப்பு முறைகளை துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வரிசை முறையை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் மற்றும் மத்திய அமைச்சகங்களும் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் தவறாமல் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.