அண்ணாமலை மாநாட்டில் போதை பழக்கத்திற்கு எதிராக 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடக்கும் வீ த லீடர்ஸ் அமைப்பின் மாநாட்டில் போதைப்பழக்கத்திற்கு எதிராக 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொள்ளாச்சியில் நடக்கும் அண்ணாமலையின் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.ஒவ்வொரு ஜூலை மாதமும் 'ஒயிட் பேண்ட்' மாதம்; போதை பயன்படுத்த மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்
2.பள்ளி, கோவில் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்
3.கள்ளச்சந்தை போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்தவேண்டும்
4.மாவட்டம்தோறும் போதை தடுப்புக்குழு உருவாக்க வேண்டும்
5.புதிய மனமகிழ் மன்ற பார்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது
6.போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்
இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வீ த லீடர்ஸ் அமைப்பின் மொபைல்போன் செயலியை அண்ணாமலை வெளியிட்டார்.
பொள்ளாச்சியில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் நடந்த மாநாடு தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதனைக் காண:https://www.youtube.com/watch?v=RBQk0KY1l04