📅 Sunday, 12 July 2026 IST | ஆனி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 11, 2026 11:34 PM

201 ரன் எடுத்தும் இந்திய அணி படுதோல்வி.. முதன்முறையாக 4 தோல்விகள்.. அடுத்தடுத்து 'ஒயிட்வாஷ்'

201 ரன் எடுத்தும் இந்திய அணி படுதோல்வி.. முதன்முறையாக 4 தோல்விகள்.. அடுத்தடுத்து 'ஒயிட்வாஷ்'

201 ரன் எடுத்தும் இந்திய அணி படுதோல்வி.. முதன்முறையாக 4 தோல்விகள்.. அடுத்தடுத்து 'ஒயிட்வாஷ்'

சவுதாம்ப்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய அவமானத்தைச் சந்தித்துள்ளது. இதன் மூலம், தனது சர்வதேச டி20 வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு தொடரில் 4 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்தடுத்து இரண்டு டி20 தொடர்களில் (அயர்லாந்திடம் 0-2, இங்கிலாந்திடம் 0-4) ஒயிட்வாஷ் ஆகி படுதோல்வி அடைந்து படுமோசமான சாதனையைப் படைத்துள்ளது.

சவுதாம்ப்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 258 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. அயர்லாந்து மண்ணில் 0-2 என ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, தற்போது இங்கிலாந்திலும் 0-4 என்ற கணக்கில் தொடரை முழுமையாகப் பறிகொடுத்துள்ளது. இந்திய டி20 வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு டி20 தொடர்களில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் ஒயிட்வாஷ் ஆவது இதுவே முதல்முறையாகும்.

இந்தப் போட்டியில் 259 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தியபோது தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 35 பந்துகளில் 56 ரன்களும், திலக் வர்மா 25 பந்துகளில் 53 ரன்களும் குவித்து அரைசதம் அடித்து ஓரளவிற்குப் போராடினர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் எடுத்தார்.

ஆனால், இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தன. சிவம் துபே 14 ரன்கள், அறிமுக வீரர் சூர்யான்ஷ் ஷெட்கே 7 ரன்கள், அக்சர் படேல் 3 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றி, டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதித்துள்ளது. அடுத்தடுத்து ஒயிட்வாஷ் ஆகி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.