விபசாரத்துக்கு ஆள் இறக்குறீங்களா?.. ஷூட்டிங்கில் நடந்த களேபரம்.. ஆத்தி என்ன ஆனது தெரியுமா?
சென்னை: காதல் படத்தில் நடித்து பிரபலமானவர் சுகுமார். அந்தப் படம் தவிர்த்து இன்னும் பல படங்களில் நடித்திருக்கும் அவர்; முகநூலில் ஆக்டிவ்வாக இருப்பவர். அந்தவகையில் சினிமா ஷூட்டிங்கின்போது நடந்த சம்பவம் ஒன்றை அவர் இப்போது பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமா ஒருவரை ஒரே நைட்டில் ஒபாமா ஆக்கும். இல்லையென்றால் இருக்கும் இடமே தெரியாமல் காலி செய்துவிடும். அதன் காரணமாகத்தான் சினிமாவை பலர் விரும்பினாலும்; அவர்கள் ஒருவித அச்சத்துடன் உலா வருவார்கள். குறிப்பாக இந்த ஃபீல்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலைமையும் இருக்கிறது. பெண்கள் இயக்குநர்களாகவும், ஹீரோயின்களாகவும் இருந்தாலும் முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பதுதான் எதார்த்தம்.
சுகுமாரின் பதிவு: அதேபோல் சினிமாவில் பணியாற்றும் பெண்களை தரக்குறைவாக பார்க்கும் வழக்கமும் இன்னமும் ஒழியவில்லை. இந்நிலையில் தான் நடித்த ஒரு தெலுங்கு படத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகர் காதல் சுகுமார். அவர் வெளியிட்டிருக்கும் முகநூல் பதிவில், "விபச்சாரத்துக்காடா பொண்ணுங்கள இறக்குறீங்க..
ஆயுதபூஜை என்றாலே தெலுங்கில் நான் நடித்த "செடுகுடு" எனும் திரைப்படம் மறக்கவே முடியாது. "நீங்கள் கேட்டவை படத்தில். ஓ வசந்தராஜா ஆடலுக்கு நடிப்பாரே பானுசந்தர் அவரது மகன் ஜெயந்த் அறிமுகமான படம்.ஆயுதபூஜை தினக் கொண்டாட்டத்தோடு ஒரு பஞ்சாயத்து சீன் வைக்க டயலாக் பேசும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் 50 பேர் வேண்டும் என புதிதாக சேர்ந்த அசிஸ்டன்ட் டைரக்டரிடம் இயக்குனர் சொல்லி விட்டார். சூட்டிங் பேக்கப் ஆனபோது அவரைக் காணவில்லை.
எல்லோரும் தேட டைரக்டருக்கு ஒரு போன் கால் "உங்க ஆளு ஸ்டேசன்ல இருக்காரு உடனே வாங்க" .. என அங்கே காரில் சென்றோம்.. "வீடு மீ வாளா அதடு செப்பிந்தி நிஜமா?" "ஏமி ஆயிந்தி சார்? என்ன நடந்தது??? அந்த உதவி இயக்குனர் மேனேஜரிடம் சென்னை நம்பர் வாங்கியவர்... நாங்கள் இருந்த இடத்தில் சிக்னல் கிடைக்கவில்லை என மெயின் ரோடு வரை போய் சென்னையில் இருக்கும் ஆர்ட்டிஸ்ட் ஏஜென்டிடம் போனில்-
"தமிழ் பொண்ணுங்க 20 பேரு வேணும் ...வயசு 18ல இருந்து 25 க்கு உள்ள.., அப்புறம் கலர்ஃபுல்லா வேணும்., பெங்களூர் ஏஜெண்டுகிட்ட சொல்லி ஒரு 15 பொண்ணுங்க..ஆந்திரா வேணாம்...கேரளா இருந்தாலும் ஓகே எனப் பேசுவதை பக்கத்தில் நின்று பைக்கில் ரோந்துக்கு வந்த போலீஸ் கேட்டு ரகசிய தகவல் கொடுத்து அள்ளிப்போட்டு சென்று விட்டார்கள்.
சூட்டிங் நடந்த இடம் சிட்ரடா எனும் கிராமம் அங்கிருந்து பெத்தாபுரம்( காக்கிநாடா அருகே) பத்து கிமீ தொலைவுதான். பலான மேட்டருக்கு பிரசித்தம் கொடிகட்டிப் பறக்கும் இடம். அசிஸ்டன்ட் டைரக்டர் எல்லா ஸ்ட்டேட்டிலும் இருந்து பெத்தாபுரத்துக்கு ஃபிகர் கடத்துகிறாரோ என அறைகுறையாக கேட்டுவிட்டு ஏதோ பெரிய கேஸு சிக்கி விட்டதாக கூட்டிச் சென்றிருக்கிறார்கள் பிறகு பேசி அவரை அழைத்து வந்தோம்" என குறிப்பிட்டிருக்கிறார்.