பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சும்மாவிட மாட்டேன்: முதல்வர் விஜய் ஆவேசம்
தாராபுரம்: என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்; பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சும்மாவிட மாட்டேன் என முதல்வர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில், இன்று (அக் 04) பிரசாரம் ஓய்கிறது; தாராபுரத்தில் இன்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரித்த முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். ரோடு ஷோவில் முதல்வர் விஜய் பேசியதாவது: இரண்டாவது முறையாக இந்த தாராபுரம் தொகுதிக்கு வந்த என்னை பார்த்து தேர்தல் பயம் என்று சொல்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்க்க வரும் ஆள் நான் கிடையாது; என் சொந்தங்களை எப்போது வேண்டுமானாலும் வந்து பார்ப்பேன்; எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்; உங்களுக்கு என்ன அது பற்றி? நான் நேற்று முன்தினம் மதுராந்தகம் போய் இருந்தேன். அங்கு ஒவ்வொரு ஊரிலும் மக்களை பார்த்து சந்தித்து பேசியது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அது மாதிரி தாராபுரம் சொந்தங்களையும் இன்னைக்கு நான் பார்க்க வந்து இருக்கிறேன்.
காது கொடுத்து கேட்க முடியாத அளவு சத்தியபாமா குறித்து முதல்வர் விஜய் பேசிட்டு போய் இருக்கிறார்; மறக்கிற மாதிரியாக பேசிவிட்டு போய் இருக்கிறார். அவர் மட்டுமா, அவர் வளர்த்து வைத்து இருக்கும் எல்லோரும் இப்படி தான் பேசிவிட்டு போகின்றனர். என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்; நான் அதை தாங்கி கொள்கிறேன். அதை நான் பொறுத்துப்பேன். ஆனால் நமது சகோதரியை பற்றியோ, நமது வீட்டில் இருக்கும் அம்மா, அக்கா, தங்கைகளை பற்றி நீங்கள் பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.
கூத்து கிடையாது!
இது இன்றைக்கு, நேற்று நடக்கின்ற கூத்து கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மேடம் காலத்திலிருந்து இதே மாதிரிதான் அசிங்கமாக, அவதூறாக இதே பொழப்பாக வச்சுட்டு இருக்காங்க. ஆனால், அன்னைக்கு அவங்க இரண்டு பேரும் ரொம்ப தைரியமாக, ரொம்ப கவனமாக இருந்தனர். இந்த தி.மு.க., உடன் கை கோர்க்க கூடாது. ஆனால், இன்றைக்கு என்ன நடக்குது? இந்த மற்றும் பலரும் இந்த தி.மு.க.,வும் மறைமுகமாக கூட்டு சேர்ந்து, யாரோடெல்லாம் கூட்டு சேர கூடாதோ அவங்களோடு எல்லாம் கூட்டு சேர்ந்து, இந்த மாதிரி பண்ணிட்டு இருக்காங்க.
விசில் சின்னத்துக்கு...
அதனால் மக்களே, அக்., 6 ம் தேதி காலையில் சும்மா பக்காவா ரெடியாகி, வாக்காளர் கார்டை கையில் எடுத்துகிட்டு, உங்க வீட்டில் இருக்கின்ற எல்லோரையும் கூட்டிக்கிட்டு, உங்க வீட்டு, பக்கத்து வீட்டு சொந்தங்கள் எல்லாரையும் கூட்டிக்கிட்டு, உங்க பக்கத்துல இருக்கிற பூத்துக்கு போய் விசில் சின்னத்துக்கு நேராக இருக்கின்ற அந்த பட்டனை ஒரு அழுத்து அழுத்துங்க. உங்க சின்னம், நமது சின்னம், நமது வெற்றி சின்னம். அப்பறம் என்னங்க நம்பிக்கையாக இருங்க. நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
தாராபுரத்தில் முதல்வர் விஜய் மாட்டு வண்டியில் சென்று பிரசாரம் செய்தார். வேலு நாச்சியார் வேடமணிந்த சிறுமியை பிரசார வாகனத்தில் ஏற்றி முதல்வர் விஜய் கொஞ்சி மகிழ்ந்தார்.
தாராபுரம் மூலனூர் வஞ்சியம்மன் கோவிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரமாண்ட ரோடு ஷோ; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்