📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 13, 2026 02:04 AM

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: அரசே வழங்கும் இலவச பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: அரசே வழங்கும் இலவச பயிற்சி

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் 14-ம் தேதி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

6,574 பணியிடங்களுக்கான அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் விஏஓ, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பதிவுறு எழுத்தர், முதுநிலை ஆய்வக உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 46 வகையான பதவிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 574 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் வணிகவியல், கூட்டுறவு மேலாண்மை போன்ற பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிஓஏ சான்றிதழ், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து சான்றிதழ் பெற்றவர்கள் வரும் நவம்பர் 5ம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வானது அடுத்தாண்டு ஜனவரி 10ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவச பயிற்சி வழங்குமாறு வேலைவாய்ப்புத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இதற்கான பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தூத்துக்குடி, சேலம், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

14ம் தேதியிலிருந்து பயிற்சி வகுப்பு