📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 20, 2026 11:03 AM

தமிழகத்தில் ஒரே நாளில் 8 படுகொலைகள் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 8 படுகொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மாநிலத்தின் சட்டம்ஒழுங்கு எவ்வளவு முக்கியமானது என்பது முதலமைச்சருக்கு புரிகிறதா அல்லது புரிந்தும் நிர்வாகத் திறமையின்மையால் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளாரா என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஏற்கனவே நடைபெற்றுள்ள படுகொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.