📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 10, 2026 06:30 AM

தமிழக முதல்வராக முதல்முறை: இன்றிரவு லண்டன் செல்கிறார் முதலமைச்சர் விஜய்

தமிழக முதல்வராக முதல்முறை: இன்றிரவு லண்டன் செல்கிறார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு முறைப் பயணமாக இன்று (செப்.10) இரவு லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.

முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தில் முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தும் முதல்வர் விஜய், தமிழகத்தில் முதலீடு செய்ய அவர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.

துபாய் வழியாக லண்டன்பயணம்:

சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 10 மணியளவில் பயணிகள் விமானத்தில் துபாய் செல்லும் முதலமைடச்சர் விஜய், அங்கிருந்து வேறு விமானத்தில் வெள்ளிக்கிழமை (செப்.11) லண்டன் செல்கிறார்.

லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் விஜய் பங்கேற்று பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.

1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்:

லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி இரவு புறப்பட்டு, துபாய் வழியாக சென்னைக்கு செப்டம்பர் 17-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் வந்தடைகிறார்.

தமிழகத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்துவதே இலக்கு என தமிழ் நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்து இருந்த.

மேலும், தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாள்களில் வெற்றி முதலீட்டு மாநாட்டை நடத்தி, 104 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.