📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 24, 2026 07:05 AM

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும் - மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: எஸ்ஐஆர் செயல்முறையில் உள்ள முரண்பாடுகளை இரண்டு தேர்தல் ஆணையர்கள் எதிர்த்ததாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் மற்றும் அவமானகரமான ஒரு விவகாரம். வாழ்நாளில் இதுபோன்ற ஒன்றை பார்த்ததே இல்லை. சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையர் கைது செய்யப்பட வேண்டும். பதவியில் தொடர அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை; நமது அரசியலமைப்பைத் தகர்க்க முடியாது என்பதை பாஜக உணர வேண்டும் என பொரிந்து தள்ளி உள்ளார்.

தொடர்ந்து பேசி உள்ள மம்தா, பாஜக-வால் ஜனநாயகத்தை அழிக்க முடியாது. நான் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினர் முன்பே கூறியது இப்போது அம்பலமாகியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் காவல்துறையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்; பாஜகவுடன் இணைந்து, பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்ட தங்கள் ஆட்களையே அவர்கள் நியமித்துள்ளனர். இத்தகைய மோசமான செயல் இதற்கு முன் நடந்ததே இல்லை. உங்களுக்குச் சிறிதளவேனும் கண்ணியம் இருந்தால், உங்களைக் கைது செய்யுமாறு நீங்களே கோரியிருப்பீர்கள். நீங்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று ஞானேஷ் குமாருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.