தியேட்டர்களை கதறவிடும் 'ஆலோ அலப்பலோ' பாடல்..சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம் போட்ட பூர்ணா உற்சாகம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆலோ அலப்பலோ' பாடல் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களை ஆட்டம் போட வைத்து வருகிறது. தியேட்டர்களில் இந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் ரசிகர்கள் காகிதங்களை பறக்கவிட்டு உற்சாகத்தில் நடனமாடி வருகின்றனர்.
நெகிழ்ந்த பூர்ணா: இந்த பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சிறப்புத் தோற்றத்தில் மாஸாக நடனமாடியுள்ள பிரபல நடிகை பூர்ணா, தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நெல்சனுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,மலையாளம், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வந்தாலும், இவ்வளவு பிரம்மாண்டமான 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருக்கிறது எனது நன்றியை எப்படி தெரிவிப்பது என்றே தெரியவில்லை.
நெல்சனுக்கு நன்றி: சினிமாத்துறையில் இருக்கும் ஒவ்வொரு நடிகரின் மாபெரும் கனவும் ரஜினி சாருடன் இணைந்து நடிப்பதுதான். அந்த பெருமை என் வாழ்க்கையிலும் நடந்துவிட்டது. ரஜினி சாருடன் இணைந்து நடனமாடியதை நினைக்கும்போதே என் மெய் சிலிர்க்கிறது. இந்த அருமையான வாய்ப்பை எனக்கு தந்த இயக்குநர் நெல்சன் சாருக்கு மிகப்பெரிய நன்றி என தனது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
'ஆலோ அலப்பலோ': இயக்குநர் நெல்சனின் மாஸ் விஷுவல் ட்ரீட் மற்றும் அனிருத்தின் வெறித்தனமான இசையில் வெளியான 'ஆலோ அலப்பலோ' பாடலில் நடிகை பூர்ணாவின் நடனமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம் போட்ட தனது வாழ்நாள் கனவு நனவானதை பூர்ணா உருக்கமாக பகிர்ந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கர்ப்பமாக இருந்தேன்: படம் வெளியாவதற்கு முன்பு பேட்டி அளித்து இருந்த பூர்ணா, 'ஆலோ அலப்பலோ' பாடல் படப்பிடிப்பு ஆறு நாட்கள் நடந்தது. அந்த பாடலின் படப்பிடிப்புக்கு சென்றபோது, முதல் முறையாக கேமராமேன் நிற்பதை போல ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. ஏன் என்றால் ஜெயிலர் முதல்பாகத்தில் காவாலா பாடல் மிகபெரிய ஹிட், அந்த பாடலுக்கு ஈடாக இருக்க வேண்டுமேன என்ற பதற்றம் இருந்தது. 'ஆலோ அலப்பலோ' பாடலுக்காக படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'அகண்டா' படப்பிடிப்பிற்கு சென்ற பிறகுதான், நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் எனக்கு தெரிந்தது என பேசி இருந்தார்.