📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 01, 2026 02:04 PM

ரேஷன் கடைகளில் ரூ. 35க்கு வெங்காயம்: சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

ரேஷன் கடைகளில் ரூ. 35க்கு வெங்காயம்: சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

சென்னை: ரேஷன் கடைகளில் வெங்காயம் 1 கிலோ ரூ.35க்கு கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் விற்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்தார்.

சட்டசபையில் உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசியதாவது: விவசாயிகளின் தோழன் முதல்வர் விஜய் ஆட்சியில் மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை ஏற்றதால் போக்குவரத்து செலவு உயர்வு, அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்யக்கூடிய மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவிலிருந்து வெங்காய வரத்து குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ 56 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில்கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து மக்களுக்கு நியாயமான முறையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு நகர்ப்பகுதியில் உள்ளகூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான விற்பனை பண்டகசாலைகள் வழியாக அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாயவிலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8,739 நியாயவிலை கடைகளில், வரும் 3ம் தேதி முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1 கிலோ வெங்காயம் ரூ. 35க்கு வழங்கப்படும்.

தேவையின் அடிப்படையில், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் வெங்கடரமணன் பேசினார்.

சிறப்பு வீடியோ!

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்