ஈரான்
புதுடெல்லி: ஈரான்-அமெரிக்கா போர் மற்றும் சவுதி அரேபியா மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தாண்டி உள்ளது.
மத்திய கிழக்கில் தீவிர மடைந்து வரும் ஈரான்-அமெரிக் கா இடையேயான நேரடி ராணுவ மோதலும், அதன் நீட்சியாக சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தித் தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ள அதிரடித் தாக்குதல்களும் உலகளவில் பெரும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த தாக்குதல்களின் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று மீண்டும் 100 டாலரைத் தாண்டியது.
பின்னர் அது சற்று குறைந்து ஒரு பேரலுக்கு 99.90 டாலராக சரிந்தாலும், மத்திய கிழக்கில் புதிய பதற்றங்கள் உருவானால் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஈரான்-அமெரிக்கா போர் தொடங்கியதிலிருந்து எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றன.
வாகன ஓட்டிகள் பாதிப்பு
மேலும் பரந்த பிராந்திய ஸ்திரத்தன்மையின்மையால் எண்ணெய் துறை மீதான அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு உலகெங்கிலும் உள்ள வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.