📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 11, 2026 12:33 AM

மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

திருவாரூர்,

புதிய தலைமை செயலகம் குறித்து, முதல்-அமைச்சர் என்ன முடிவு செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேட்டூர் அணையில் இருக்கின்ற தண்ணீரை எவ்வளவு பாசனத்திற்கு கொடுக்கலாம் என, துறை ரீதியாக ஆய்வு செய்த பிறகு தான் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நிச்சயம் மழை மற்றும் வெள்ளம் வரும் சூழ்நிலை உருவாகும். விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது. முதல்-அமைச்சர் அறிவித்த பயிர்கடன் தள்ளுபடி மானிய தொகை, விரைவில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு வந்து சேரும்.

கூட்டுறவு சங்கங்களில் மாநில அரசின் நிதி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் நோக்கம். இதற்கு முன்பு கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு, ஐந்தாண்டு காலத்துக்கு அரசின் நிதிக்கு ஏற்ப பணத்தை ஒதுக்குவது வழக்கம். தற்போது அந்த முறைகள் மாற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.