📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 16, 2026 11:02 AM

Ranabaali X Review: ரணபலி ட்விட்டர் விமர்சனம்.. என்னங்க விஜய் தேவரகொண்டா படம் இப்படி ஆகிப்போச்சே?

Ranabaali X Review: ரணபலி ட்விட்டர் விமர்சனம்.. என்னங்க விஜய் தேவரகொண்டா படம் இப்படி ஆகிப்போச்சே?

சென்னை: ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, மம்மி வில்லன் அர்னால்ட் வாஸ்லூ என ஏகப்பட்ட பேர் நடித்துள்ள ரணபலி படம் இன்று வெளியானது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று பல்வேறு இடங்களில் தெலுங்கில் மட்டுமே ஒரு சில காட்சிகள் மட்டும் வெளியாகி உள்ளன.

பல இடங்களில் தமிழில் படம் வெளியாகாத நிலையில், விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். ரணபலி படம் மட்டுமின்றி இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த கலையரசனின் டைட்டானிக் படமும் கடைசி நேரத்தில் ஷோவே கிடைக்காத நிலையில், போஸ்ட்போன்ட் செய்யப்பட்டுள்ளது.

ட்ரோன்ஸ் திரைப்படம் ஜெயிலர் 2வுடன் போட்டியாக வெளியான நிலையில், அந்த படத்துக்கும் ஒரு சில காட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன. ரணபலி படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த படத்துக்கு சமூக வலைதளங்களில் கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

ரணபலி ட்விட்டர் விமர்சனம்: விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், ரணபலி கண்டிப்பாக அவருக்கு வெற்றிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தை பார்த்த தெலுங்கு ரசிகர்களே விஜய் தேவரகொண்டாவின் உழைப்பு எல்லாம் அருமை தான். ஆனால், படம் தான் டெட் ஸ்லோ என கழுவி ஊற்றி வருகின்றனர்.

2 ஸ்டார் தான்: விஜய் தேவரகொண்டாவின் கடின உழைப்பு நன்றாகவே கண்ணுக்குத் தெரிந்தாலும், படம் ரொம்பவே போர் அடிக்கும் விதமாக இயக்குநர் பொறுமையோ பொறுமை என்கிற ரீதியில் காட்சிகளை நகர்த்திக் கொண்டு சென்றது தான் படத்திற்கு மைனஸ் ஆக மாறியுள்ளது. இந்தியர்களை அடிமைப்படுத்தி வெள்ளையர்கள் செய்த கொடுமைகளை படமாக்கிய விதம் அருமை. ஆனால், பல இடங்களில் அதே ரிப்பீட் ஆவது கடுப்பை ஏற்படுத்துகிறது. ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா காதல் காட்சிகள் தான் தியேட்டருக்குச் சென்ற ஆடியன்ஸுக்கு ஒரே ஆறுதல் 5க்கு வெறும் 2 ரேட்டிங் தான் என விமர்சகர் வெங்கி கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்.

கோழி கழுத்தை கடிக்கிறாரு: விஜய் தேவரகொண்டா ரணபலி படத்தில் கோழி கழுத்தை கடித்துத் துப்பும் அளவுக்கான காட்சிகள் எல்லாம் இடம்பெற்றுள்ளன. அதை ஷேர் செய்து படத்தை பார்க்க முடியலடா சாமி என கும்பிடு போட்டு வருகின்றனர். இந்த முறையும் விஜய் தேவரகொண்டாவுக்கு பிளாக்பஸ்டர் வெற்றி கிடைக்கவில்லை என்கின்றனர். தெலுங்கிலும் ரணபலி படத்தை ஜெயிலர் 2 டாமினேட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.