📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 16, 2026 03:03 PM

ஆயுதபூஜை ஸ்பெஷல்: முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவைகள்

ஆயுதபூஜை ஸ்பெஷல்: முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவைகள்

ஆயுதபூஜை ஸ்பெஷல்: முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவைகள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாம்பரம் முதல் மானாமதுரை வரையிலான சிறப்பு முன்பதிவில்லா ரயில் சேவை இன்று தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Published : October 16, 2026 at 11:14 AM IST

சென்னை: ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுத்தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆயுதபூஜை பண்டிகைகளை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் - மானாமதுரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்

அதன்படி, தாம்பரம் - மானாமதுரைக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் ஒன்று, வண்டி எண் 06161 தாம்பரம் - மானாமதுரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை இன்று (அக்டோபர் 16) மாலை 5.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நாளை அதிகாலை 3 மணிக்கு மானாமதுரையை வந்தடையும்.

அதேபோல், மறுமார்க்கத்தில் வண்டி எண் 06162 மானாமதுரை - தாம்பரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவையானது நாளை (அக்டோபர் 17) காலை 10.45 மணிக்கு மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலில் 12 பெட்டிகள் இருக்கும்.

இதனைத் தொடர்ந்து, மற்றொரு சிறப்பு ரயிலானது, வண்டி எண் 06159 தாம்பரம் - மானாமதுரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் நாளை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, அக்டோபர் 18-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மானாமதுரை ரயில் நிலையத்தை வந்தடையும்.

அதேபோல், மறுமார்க்கத்தில் வண்டி எண் 06160 மானாமதுரை - தாம்பரம் முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 20 பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலில் 12 பெட்டிகள் இருக்கும்.

இந்த இரண்டு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களும், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, திருப்புவனம் வழியாக மானாமதுரை ரயில் நிலையத்தை வந்தடையும். அதேபோல், மறுமார்க்கத்திலும் இதே வழித்தடத்தில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் - திருச்சிராப்பளி முன்பதிவில்லா சிறப்பு ரயில்

இதையடுத்து, சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி ஒரு வழி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வண்டி எண் 06191 சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி ஒரு வழி முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது இன்று இரவு 7 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நாளை (அக்டோபர் 17) அதிகாலை 4.05 மணிக்கு திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தை வந்தடையும்.

இதில் 12 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். இந்த ரயிலானது சென்னை எழும்பூரில் தொடங்கி, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவெரும்பூர் வழியாக திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தை வந்தடையும்.

அதேபோல், வண்டி எண் 06192 திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் ஒரு வழி முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து நாளை (அக்டோபர் 17) காலை 5.50 மணிக்கு புறப்பட்டு அதேநாள் முற்பகல் 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயிலானது திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இதனைத் தொடர்ந்து, சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வண்டி எண் 06193 சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்பட்டு, அக்டோபர் 18 அதிகாலை 4.45 மணிக்கு திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தை சென்றடையும்.

அதேபோல், மறுமார்க்கத்தில் வண்டி எண் 06194 திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 20 அன்று இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, அக்டோபர் 21ஆம் தேதி காலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும். இதிலும் 12 பெட்டிகள் இருக்கும்.

இந்த ரயிலானது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவெரும்பூர் வழியாக திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கத்திலும் இதே வழித்தடத்தில் இந்த ரயில் சேவை இயக்கப்படும்” என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி ரயில் சேவை நீட்டிப்பு

இதனைத் தொடர்ந்து, சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவையை கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை சென்னை கடற்கரை - தாம்பரம் வரையிலான EMU ரயில் சேவையானது தற்காலிகமாக கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, வண்டி எண் 40073 ரயிலானது மாலை 6.44 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு இரவு 7.44 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை அடைந்து, இரவு 8.10 மணிக்கு கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தை வந்தடையும். அதேபோல், வண்டி எண் 40077 சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.10 மணிக்கு தொடங்கி, இரவு 8.10 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்து, இரவு 8.30 மணிக்கு கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தை சென்றடையும்.

இதனைத் தொடர்ந்து, கூடுவாஞ்சேரி - தாம்பரம் பயணிகள் சிறப்பு ரயிலானது இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது. அதன்படி, பிஎஸ்2 பயணிகள் சிறப்பு ரயிலானது கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 8.40 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும். அதேபோல், பிஎஸ்4 பயணிகள் சிறப்பு ரயிலானது கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.10 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும்” என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.