📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 25, 2026 10:03 AM

ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் அதே தொகுதியில் மீண்டும் போட்டி; தடை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் அதே தொகுதியில் மீண்டும் போட்டி; தடை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்கள் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கு: தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து, அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை ஏற்கும் வகையில், பணத்தை டிபாசிட் செய்ய விதிமுறை வகுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கில் இன்று (செப் 24) சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டது.

ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்கள் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். இது போன்ற விஷயங்களுக்கு பார்லிமென்ட், சட்டசபை வாயிலாக மட்டுமே சட்டம் இயற்ற முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பிரத்யேக வீடியோ!

இடைத்தேர்தலில் ராஜினாமா எம்எல்ஏக்கள் போட்டியிட தடை கேட்டு வழக்கு; சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்