📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 25, 2026 11:04 AM

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு தடை கோரியும், தேர்தல் செலவை ராஜினாமா செய்தவர்களே ஏற்கும் வகையில் நடைமுறையை வகுக்க கோரியும் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில் நாங்கள் சட்டத்தை இயற்ற முடியாது. நாடாளுமன்றம்தான் அதை செய்ய முடியும். எனவே மனுதாரர் கோரும் நிவாரணத்தை தர முடியாது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளனர்.