📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 25, 2026 10:03 AM

காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகவுள்ளோம்

காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகவுள்ளோம்

கார்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி காவிரி நீர் திறக்க உத்தரவிடுமாறு தமிழ்நாடு ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தீர்ப்பை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் தமிழகத்திற்கு வினாடிக்கு 4,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் காவேரி விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தண்ணீர் இருந்தால் மட்டுமே நாங்கள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவோம். கர்நாடக நீர்த்தேக்கங்களுக்கான நீர்வரத்து நின்றுவிட்டது. மழை நின்றுவிட்டதால் நாங்கள் கடும் அழுத்தத்தில் இருக்கிறோம். காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகவுள்ளோம். இன்று மாலை நடைபெறும் சிறப்புக் கூட்டத் தொடரில் மேல்முறையீடு செய்வது குறித்த விஷயத்தை நான் மறு ஆய்வு செய்வேன். ”

இவ்வாறு அவர் கூறினார்.