📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 25, 2026 12:00 PM

Dorothy Dhanush's Review

Dorothy Dhanush's Review

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் டோரதி திரைப்படம் இன்று ரிலீஸாகிறது. இதுவரை படம் பார்த்த அனைவருமே தங்களது பாராட்டை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான தனுஷ் டோரதி படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை ஷேர் செய்திருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய முதல் படத்திலிருந்தே தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார். பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த அவர்; மெர்குரி, ஜகமே தந்திரம் படங்களில் மட்டும் தடுமாறினார். அந்தப் படங்களுமே வணிக ரீதியாக தோற்றாலும் விமர்சன ரீதியாக தப்பித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதனையடுத்து இயக்கிய ஜிகர்தண்டா 2 திரைப்படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

இப்போது டோரதி: சூர்யாவுடன் இணைந்த ரெட்ரோ படத்தின் மீதும் பெரிய நம்பிக்கை இருந்தது. இருப்பினும் சில விஷயங்கள் ஒர்க் அவுட் ஆகாததால்; ரசிகர்களுடன் படமும் கனெக்ட் ஆகவில்லை. இப்போது அவர் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோரை வைத்து டோரதி படத்தை இயக்கியிருக்கிறார். கார்த்திக் இயக்கும் படத்துக்கு இளையராஜா முதன்முறையாக இசையமைத்திருக்கிறார்.

பட்டையை கிளப்பிய பாடல்கள்: படத்திலிருந்து வெளியான பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. இதுவரை வந்திருக்கும் மூன்று பாடல்களுமே ரசிகர்களுக்கு ரிப்பீட் மோடில் இருக்கிறது. கல்யாண விருந்து பாடலை எல்லாம் அனைத்து திருமண வீடுகளிலும் ஒலிக்க விடுகிறார்கள். டோரதி மீதான எதிர்பார்ப்புக்கு இளையராஜாவின் இசை பல மடங்கு உதவியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. படமானது இன்று ரிலீஸாகவிருக்கிறது.

பாசிட்டிவ் விமர்சனங்கள்: அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற டொரோண்டோ சர்வதே திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அதிலும் படத்துக்கு ஏகபட்ட பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான். அனைவருமே எழுந்து நின்று கை தட்டி கொண்டாடினார்கள். இதனால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும், அனுராக் காஷ்யப், சசி உள்ளிட்ட இயக்குநர்களும் டோரதி கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர் பீஸ் என புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.

டோரதி தனுஷ் விமர்சனம்: இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான தனுஷ் டோரதி படம் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை ஷேர் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "டோரதி.. கார்த்திக் சுப்புராஜிடமிருந்து வந்திருக்கும் ஒரு மாஸ்டர் பீஸ். தைரியமான மற்றும் ஆழமான படைப்பு. மிகவும் இயல்பாகவும் தீவிரமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு நடிகரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். நமது இளையராஜாவின் பின்னணி இசை மனதை அப்படியே உலுக்கிவிடும். இசைஞானியின் ருத்ர தாண்டவம். என் அன்பு நண்பர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் இப்படத்துக்காக வாழ்த்துகள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.