📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 29, 2026 06:03 PM

புதிய வரலாறு.. ஆசிய விளையாட்டில் 3 பதக்கங்களை அள்ளிய குல்வீர் சிங்.. 5000 மீட்டரில் வெண்கலம்

புதிய வரலாறு.. ஆசிய விளையாட்டில் 3 பதக்கங்களை அள்ளிய குல்வீர் சிங்.. 5000 மீட்டரில் வெண்கலம்

புதிய வரலாறு.. ஆசிய விளையாட்டில் 3 பதக்கங்களை அள்ளிய குல்வீர் சிங்.. 5000 மீட்டரில் வெண்கலம்

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி, மூன்றாவது பதக்கத்தை அறுவடை செய்துள்ளார். ஆடவர் 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று ஹாட்ரிக் பதக்க சாதனையை படைத்துள்ளார். அவர் ஏற்கனவே 10,000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் பந்தயங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் 5000 மீட்டர் இறுதிப்போட்டியில் முன்னிலை வீரர்களுடன் போட்டிபோட்ட குல்வீர் சிங், பந்தய தூரத்தை 13:32.75 நிமிடங்களில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். முதல் 2000 மீட்டர்களில் அவர் மூன்றாவது இடத்தில் இருந்தார். கடைசி நேரத்தில் வேகத்தை அதிகரித்து குல்வீர் முந்துவார் என எதிர்பார்த்த நிலையில், கடைசியிலும் மூன்றாவது இடத்தையே பிடித்தார். பஹ்ரைன் வீரர் பிர்ஹானு பாலேவ் 13:30.79 நிமிடங்களில் வந்து தங்கம் வென்றார். ஜப்பானின் டோமோனோரி யமாகுச்சி 13:31.43 நிமிடங்களுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்த போட்டியில் இந்தியா சார்பில் குல்வீர் சிங்குடன் மற்றொரு நட்சத்திர வீரரான அவினாஷ் சாப்ளேவும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இறுதிப்போட்டியில் பங்கேற்கவில்லை. குல்வீர் சிங் மட்டுமே இந்தியாவிற்காக களமிறங்கி பதக்கத்தை உறுதி செய்தார்.

ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10,000 மீட்டர், 1500 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் என மூன்று நீண்ட தூர ஓட்டப் பந்தயங்களிலும் பதக்கம் வென்று குல்வீர் சிங் அரிய சாதனையை படைத்துள்ளார். நடப்பு ஆசியப் போட்டியில் இந்திய தடகள அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக குல்வீர் சிங் ஜொலித்து வருகிறார்.