📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 29, 2026 08:04 PM

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இளைஞர் படுகொ*: ஒருவர் கைது

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இளைஞர் படுகொ*: ஒருவர் கைது

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இளைஞர் படுகொ*: ஒருவர் கைது

சென்னை: ஐஸ் ஹவுஸ் பகுதியில் தாயுடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அஜித் (28) என்ற இளைஞரை படுகொ* செய்த ஹரிஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஐஸ் ஹவுஸ், அனுமந்தபுரம் பகுதியில் தாயுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், இரண்டு பேரால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்துத் தகவலறிந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் 28 வயதான அஜித் என்பதும், முன்விரோதம் காரணமாக அவரது எதிரிகளால் அவர் தாயின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையை ஹரிஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவர் செய்திருக்கலாம் என்று சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு அஜித் மற்றும் ஹரிஷ் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதில் ஹரிஷ் என்பவர் ‘ஏ’ பிரிவு (A Category) குற்றவாளி ஆவார். தலைமறைவாக இருந்த இவர்களைத் தேடி வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், தற்போது ஹரிஷைக் கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய மற்றொருவரான ராஜேஷைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்தக் கொலை நடந்ததற்குக் காரணம் முன்விரோதம் மட்டுமில்லாமல், கஞ்சா விற்பனையில் யார் பெரியவர் என்ற மோதலும், அந்தப் போட்டியில் ஏற்பட்ட முரண்பாடும் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.