📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 29, 2026 09:03 PM

கோவை அவிநாசி சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்.!

கோவை அவிநாசி சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்.!

கோவை அவிநாசி சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்.!

கோவை: கோவை மாவட்டம் நீலம்பூர் பகுதியில் இருந்து ஒரு குடும்பத்தினர் காரில் கோவை நகரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த கார் கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனை அருகே வந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை எழுந்துள்ளது.

இதனைக் கவனித்த ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு, உடனடியாக காரை சாலையோரம் நிறுத்தியுள்ளார். பின்னர், காரில் இருந்த தனது குடும்பத்தினரை உடனடியாக கீழே இறங்குமாறு தெரிவித்துள்ளார். அனைவரும் காரில் இருந்து இறங்கிய சில நொடிகளிலேயே, காரின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. சில வினாடிகளில் மளமளவென பரவிய தீ, கார் முழுவதும் பற்றியது.

சாலையோரத்தில் கார் ஒன்று கொழுந்துவிட்டு எரிவதைக் கண்ட பொதுமக்கள் பதற்றமடைந்து, இது குறித்து பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி காரில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

ஓட்டுநர் துரிதமாகச் செயல்பட்டு, தீப்பற்றுவதற்கு முன்பாக குடும்பத்தினரை காரில் இருந்து இறக்கியதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. காரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.