நெல்லை கவின் கொலை வழக்கு; கைது செய்யப்பட்ட சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து
நெல்லை கவின் கொலை வழக்கு; கைது செய்யப்பட்ட சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து
சென்னை: நெல்லை கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கவின் 2025 ஜூலை 27ல் திருநெல்வேலி கே.டி.சி. நகரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கவினின் காதலியான சுபாஷினியின் தம்பி சுர்ஜித், தந்தையும் போலீஸ் எஸ்.ஐ.,யுமான சரவணன், உறவினர் ஜெயபாலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் எங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சுர்ஜித் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி, உறவினர் ஜெயபால் ஆகியோர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவில், "கொலை நடந்த இடத்திலேயே நாங்கள் இல்லை. இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக மட்டுமே எங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று (செப் 29) நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். சுர்ஜித்தின் உறவினர் ஜெயபால் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு தெரிவித்தது.