📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 18, 2026 04:04 PM

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை முதல்

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை முதல்

சென்னையில் நேற்று இரவு மாநகராட்சி கமிஷனர் சமீரன் மழை பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

சென்னையில் இரவு எதிர்பாராத விதமாக மிக அதிக மழை ெபய்தது. வட சென்னை பகுதிகள் மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் பெரிய அளவில் மழைப்பொழிவு இருந்தது.

பாரிமுனை, மணலி, திருவொற்றியூர், சாத்தான்காடு, என்.எஸ்.சி. போஸ் சாலை, பிரகாசம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 5 மணிநேரம் வரையில் மழை பெய்தது. வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரையில் 70 செ.மீ. வரை சராசரியான மழை அளவாக இருக்கும். ஆனால் நேற்று இரவு ஒரே நாளில் பாரிமுனையில் 36 செ.மீ. மழை பொழிந்தது.

மழை பாதிப்புகளை சரி செய்ய 15 ஆயிரம்

சூப்பர் எல்நினோ காரணமாக வடகிழக்கு பருவ மழை பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வானிலை ஆய்வு மையமும் அதிகனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒரே நாளில் இவ்வளவு மழை பெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாநகராட்சி களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 15 ஆயிரம் பேர் மழை பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகளும் இரவில் பணியில் இருந்தனர்.

முதல்-அமைச்சர் விஜய் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மழை நிலவரம் பற்றி கேட்டறிந்தார்

இவ்வாறு அவர் கூறினார்.