📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 29, 2026 12:03 PM

ஒரு மேட்ச் கூட நடக்கலை.. இந்தியா, பாகிஸ்தான் உட்பட செமி பைனல் போன 4 அணிகள்.. ரத்தான காலிறுதி

ஒரு மேட்ச் கூட நடக்கலை.. இந்தியா, பாகிஸ்தான் உட்பட செமி பைனல் போன 4 அணிகள்.. ரத்தான காலிறுதி

ஒரு மேட்ச் கூட நடக்கலை.. இந்தியா, பாகிஸ்தான் உட்பட செமி பைனல் போன 4 அணிகள்.. ரத்தான காலிறுதி

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காலிறுதிப் போட்டிகள் அனைத்தும் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து சர்வதேச தரவரிசை விதிகளின்படி இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 4 முன்னணி அணிகளும் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.

அரையிறுதி அட்டவணை விவரம் காலிறுதிப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அக்டோபர் 1 (வியாழக்கிழமை) அன்று இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் நடைபெற உள்ளன:

ஜப்பானின் நகோயா மற்றும் நிஷின் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆசிய விளையாட்டு காலிறுதி ஆட்டங்கள் அனைத்தும் டாஸ் கூட போடப்படாமல் ரத்தாகின. பாகிஸ்தான் - ஹாங்காங் மோதிய முதல் போட்டி மழையால் ரத்தாகி, தரவரிசை அடிப்படையில் பாகிஸ்தான் (6வது இடம்) முன்னேறியது. இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதிய 2வது போட்டி ரத்தாகி, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியா அரையிறுதிக்கு சென்றது.

செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற இலங்கை - நேபாளம் இடையேயான 3வது போட்டியும் மழையால் கைவிடப்பட்டது. இதில் தரவரிசையில் முன்னிலையில் இருந்த இலங்கை (9வது இடம்) அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வங்கதேசம் - மலேசியா மோதிய 4வது காலிறுதி ஆட்டமும் மழையால் ரத்தானதால், வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்திய அணி இதுவரை இந்த தொடரில் ஒரு முழுமையான போட்டியில் கூட விளையாடவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அணியில் ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன் மற்றும் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒரு காலிறுதி போட்டி கூட நடக்காமல் ஆப்கானிஸ்தான், ஹாங்காங், மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய 4 அணிகள் வெளியேறி இருப்பது இந்த தொடருக்கான விதிமுறைகள் குறித்த விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளும் மழையால் ரத்து ஆனால் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா தங்கப் பதக்கத்தை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.